திறன் விருத்தி செயற்பாடுகள்

குருகுலம் அறக்கட்டளையின் செயற்பாடுகளுள் ஒன்றாக திறன் விருத்தி செயற்பாடும் அமைகின்றது. திறன் விருத்தி செயற்பாடு எனும் போது மாணவர்களுக்கான இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுத்தல். அதாவது சதுரங்க வகுப்புக்களை அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையில் அறிமுகப்படுத்துதல், இசை மற்றும் நடனக்கலைகளினை பயிற்றுவித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக மாணவர்களது திறன்களை விருத்தி செய்தல். அதனடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சதுரங்க வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.