ஆன்மீக சுற்றுலா

“அறநெறிக்கல்வி களப்பயணம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களினை பாட நூலில் கற்றதை நேரடியாகப் பார்த்து அறிவைப் பெறும் வண்ணமும், நமது சைவ பாரம்பரியத்தை கடைப்பிடித்து ஒழுகும் மனப்பாங்கினை விருத்தி செய்யும் நோக்கிலும், ஆலய வழிபாட்டு முறையை வாழ்க்கையில் கடைபிடிப்பதனை கட்டியெழுப்பும் வகையில் களப்பயணமாக ஆன்மீக சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்துதல்.

அந்த வகையில் முதலாவது ஆன்மீக சுற்றுலாவாக 2024 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களையும் கல்மடு பூசலார் அறநெறிப் பாடசாலை மாணவர்களையும் இணைத்து திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் ஆன்மீக இடங்களை நோக்கியதாக இவ் ஆன்மீக சுற்றுலா அமைந்தது.