அறநெறி மாணவர்களிடையே குருபூசை தினங்கள் சிவராத்திரி விரதம் போன்ற சமயம் சார் நிகழ்வுகளின் போது போட்டிகளை நடாத்தி அவர்களுக்கு பெறுமதியான பரிசில்களையும் வழங்கி மாணவர்களினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை குருகுலம் அறக்கட்டளையானது மேற்கொண்டு வருகின்றது. 2023 ஆம் ஆண்டு சித்திரை மாத சதய நட்சத்திரமான அப்பர் பெருமானுடைய குரு பூசை தினத்தை முன்னிட்டு குருகுலம் அறக்கட்டளையானது ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அறநெறி பாடசாலைகளான ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, கொம்மாதுறை விபுலானந்தா அறநெறிப்பாடசாலை, ஆண்டார்குளம் ஸ்ரீ நாகதம்பிரான் அறநெறிப்பாடசாலை, மணியபுரம் ஸ்ரீ நாகபூசணி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையே சைவ திருமுறை மனனப் போட்டியினை நடாத்தி அவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.