இலங்கையின்மட்டக்கப்பு மாவட்டத்தின் காரைதீவு எனும் ஊரில் 1892 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 27 ஆம் திகதி இவர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி தாயின் பெயர் கண்ணம்மா ஆவார்.
1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19 ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறைபதமடைந்தார். அவரது உடல் அவர் உருவாக்கியமட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது
நாவலர் பெருமான் இலங்கையில் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை,சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக மார்கழி 18ம் திகதி 1822 ஆம் ஆண்டு பிறந்தார்.
தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.