பாரதிபுரம், ஐயங்கேணி ஸ்ரீ ஆதிமாணிக்கப் பிள்ளையார் அறநெறிப்பாடசாலையானது 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இவ் அறநெறி பாடசாலையானது ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்திலும் மரத்தின் கீழும் இடம்பெற்று வந்தது. இதனால் அறநெறிப் பாடசாலையை நடாத்துவதில பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்தது. குறிப்பாக மழைக்காலங்களில் நடத்துவது சிரமமாக காணப்பட்டது. அவ் அறநெறிப் பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க 2020 ஆம் ஆண்டு திரு. தவராசா குடும்பத்தினரின் அனுசரணையுடன் அறநெறி பாடசாலைக்கு என ஓர் கட்டடம் அமைக்கப்பட்டு 2021 பங்குனி மாதம் உத்தர நட்சத்திர தினத்தில் “சத்தியபாமா” என்னும் பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.