‘’அன்னம் பாலிப்போம்’’ என்ற செயற்றிட்டத்திற்கு இணங்க சிறுவர்களின் பசி தீர்க்கும் சேவையினை குருகுலம் அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது. இத் திட்டமானது அறநெறிப்பாடசாலை மாணவர்களினை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்படுவதோடு தற்போது இத் திட்டத்தின் மூலம் நான்கு அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தினை தேவையுள்ள ஏனைய அறநெறிப் பாடசாலைகளுக்கும் விரிவாக்கம் செய்யவும் குருகுலம் அறக்கட்டளையானது எதிர்பார்த்துள்ளது.