மெய்ப் பொருள் காண்பது அறிவு

அறிவு, ஆரோக்கியம், ஒழுக்கம் ஆகிய வாழ்வின் உயரிய விழுமியங்கள் பற்றிய அறிவூட்டலை இளைய சமுதாயத்திற்கு கொடுப்பதாக தொடங்கப்பட்டதே இக் குருகுலம் அறக்கட்டளை ஆகும். இதன் செயற்பாடானது எமது மொழி, கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை வளர்ப்ப தோடு இவ் அறகட்டளையினுடைய எதிர்கால வளர்ச்சியானது எமது சமூகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இருக்கும் என நாங்கள் முழுமையாக நம்புகின்றோம்.

தூரநோக்கு

  “சிறார்களுக்கு அறநெறியினை கற்பிப்பதனூடாக அவர்கள் சார்ந்த சமூகத்தினை நல்வழிப்படுத்துதல்.”

பணிக்கூற்று

“ தமிழ் பண்பாட்டுடன் கூடிய அறம் சார்ந்த வாழ்வில் சிறார்களை வழிப்படுத்தும் அறநெறிப்பாடசாலைகளினை ஒருங்கிணைத்தலும் அதே இலக்குடன் செயற்படுபவர்களுடன் இணைந்து இயங்குவதனூடாக மேம்பட்ட சமூகத்தினை உருவாக்குதல்.”

திருமந்திரம்

திருச்சிற்றம்பலம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

திருச்சிற்றம்பலம்

– திருமூலர் –